Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகர்களை பின்னுக்கு தள்ளிய சூப்பர் ஹீரோ! மாஸான சாதனை - லிஸ்ட் இதோ

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு. குழந்தையாக இருக்கும் போதே நடிக்க தொடங்கிய இவர் நம் தமிழ் சினிமாவின் நடிகர் விஜய் போல. பெரும் திரளான ரசிகர்கள் பின்னணி கொண்டவர். அவரின் படங்களும் சிறப்பான வியாபாரம் செய்து வருகின்றன.

வெளிநாட்டிலும் பாக்ஸ் ஆஃபிஸில் மில்லயன் டாலர்கள் வசூலித்து நல்ல கலெக்‌ஷன் கொடுத்து வருகிறார். அண்மையில் அவரின் நடிப்பில் Sarileru Neekevvaru என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக அவரின் நடிப்பில் ஆச்சார்யா என்ற படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அவ்ர் ட்விட்டரில் அவர் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 9 மில்லியனாக உயர்ந்துள்ளது.

The most followed South Indian Super என்ற சிறப்பை பெற்றுள்ளார். #SSMBSouthMostFollowedActor என ரசிகர்கள் டேக் இட்டு கொண்டாடிவருகிறார்கள். வாழ்த்துக்கள் மகேஷ் பாபு...

மில்லியன் கணக்கில் ரசிகர்கள் உள்ளவர்கள் யார் என பார்க்கலாம்.

  • மகேஷ் பாபு - 9 மில்லியன்
  • தனுஷ் - 8.9 மில்லியன்
  • கமல் ஹாசன் - 5.8 மில்லியன்
  • சிவகார்த்திகேயன் - 5.8 மில்லியன்
  • சூரியா - 5.5 மில்லியன்
  • ரஜினி - 5.7 மில்லியன்
  • அல்லு அர்ஜூன் - 3.8 மில்லியன்
  • விஜய் - 2.3 மில்லியன்
  • ஜீவா - 2.2 மில்லியன்
  • அருண் விஜய் - 1.5 மில்லியன்