Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகர் மற்றும் அவரின் மனைவிக்கும் கொரானா வைரஸ் தாக்குதல்! திரைத்துறையை அதிர்ச்சியாக செய்தி

சமீபகாலமாக உலக நாடுகள் மற்றும் மக்களை அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ள விசயம் கொரோனா வைரஸ் தாக்குதல் நோய். இதனால் மரணம் நிகழும் என்பதால் அவற்றிற்கு எதிராக போராடுவது மருத்துவத்துறைக்கு சவாலாகியுள்ளது.

வெளிநாடுகளிலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடும், சோதனைகளுக்கு கிடையிலும் நோய் தொற்று காற்றின் மூலம் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் டாம் ஹங்ஸ் என்பவரின் மனைவி ரிதா வில்சனுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், பாசிடிவ் என சோதனை முடிவு தெரிவிப்பதாகவும் அந்நடிகரே டிவிட்டரில் கூறியுள்ளார்.

ஹாலிவுட் நடிகர் டாம் ஹங்ஸ் The Terminal, The Da Vinci Code, Captain Phillips, Bridge of Spies போன்ற பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

அதோடு இவர் நடிப்பில் விரைவில் ஒரு சில படங்கள் திரைக்கு வருவதற்கு தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தி ஒட்டு மொத்த ஹாலிவுட் திரையுலகத்தினரையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.