Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆட்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாளர்கள்! சுட்டிக்காட்டிய ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னை லீலா பேலசில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அவர் நான் முதலமைச்சர் பதவியை விரும்பவில்லை என கூறியதை ரசிகர்கள் நிர்வாகிகள் ஏற்காதது எனக்கு ஏமாற்றம்.

ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு பெரும் தலைவர்களின் இடங்கள் பெரும் வெற்றிடமாகிவிட்டன. ஒரு பக்கம் ஆள் பலம், கட்சி கட்டமைப்பு, பண பலம் கொண்டு 10 வருடங்களாக ஆட்சியில்லாமல் வாரிசாக அரசியிலில் நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார்.

மறுபக்கம் குபேர கஜானாவை கையில் கொண்டு ஆட்சியும் கொண்டு மற்றவர்கள் காத்திருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

மேலும் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும், எல்லோரிடமும் போய் சொல்லுங்கள், மாற்றம் எல்லோரிடமும் வரவேண்டும், இந்தியா முழுக்க இவை பரவேண்டும், அப்போது நான் வருகிறேன்.

என்னை நம்பி வந்தவர்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை என கூறிவிட்டார்.