Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ப்ரஸ் மீட்டில் ரஜினி கொடுத்த அதிர்ச்சி, ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக கவலை!

ரஜினிகாந்த் இந்தியாவே வியந்து பார்க்கும் நடிகர். இவர் நடிப்பில் ஒரு படம் வருகின்றது என்றால் காஷ்மிர் முதல் கண்ணியாகுமரி வரை பேச்சு இருக்கும்.

அந்த வகையில் ரஜினி கடந்த சில வருடங்களாக தான் அரசியல் பார்வை குறித்து பேசிக்கொண்டே தான் இருக்கின்றார்.

இன்று ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் ரஜினிகாந்த்.

அதில் அவர் பேசுகையில் ‘கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை’ என்று கூறினார்.

இதன் மூலம் ரஜினிகாந்த் வெற்றி பெற்றாலும் முதலமைச்சராக இருக்க மாட்டார் என்பது போல் பேச தொடங்கிவிட்டனர்.

இது ஒட்டு மொத்த ரஜினி ரசிகர்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது, மேலும், இத்தனை வருட காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரும் வருத்தத்தையும் உண்டாக்கியுள்ளது.

ரஜினிகாந்த் தனக்கு வயது ஆகிவிட்டதாகவும், இளைஞர்கள் கட்சியில் பெரும்பங்கு வகிப்பார்கள் என்பதையும் கூறினார்.