Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வருமான வரித்துறையினர் வந்தது உண்மை, ஆனால், நடந்தது இது தானாம்

விஜய் வீட்டிற்கு தளபதி விஜய் இவரை சுற்றி கடந்த சில வருடங்களாக ஏதாவது ஒரு அரசியல் சர்ச்சை இருந்துக்கொண்டே தான் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர்.

அதிலும் படப்பிடிப்பிலிருந்த விஜய்யை அவருடைய காரில் கூட செல்ல அனுமதிக்காமல் கையோடு அழைத்து வந்தனர்.

அதை தொடர்ந்து விஜய்யிடம் பணமாக எதுவும் இல்லை என்று விளக்கம் கொடுத்தனர்.

பிறகு விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார், அதோடு தற்போது மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு தயாராகி வருகின்றார்.

இந்த நேரத்தில் மீண்டும் இன்று விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்தது.

இதை நம் தளத்திலேயெ கூறியிருந்தோம், ஆனால், உண்மையில் வருமான வரித்துறையினர் விஜய் வீட்டிற்கு வந்தார்களாம்.

அது சோதனைக்காக இல்லையாம், ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்ய தான் என விளக்கம் தந்துள்ளனர்.