Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவிற்கு வருவதற்கு முன் நடிகர் சூரி இந்த பிரபல சீரியலில் நடித்திருக்கிறார். புகைப்படத்துடன் இதோ..

நடிகர் சூரி தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்.

தற்போது இவர் தமிழ் திரைப்படங்களில் மிக அதிகமாகவே காணப்படுகிறார். ஆனால் இவரின் ஆரம்பக்காலத்தில் மிகவும் கஷ்ட்டப்பட்டுள்ளார்.

ரெட், தீபாவளி, வின்னர் உள்ளிட்ட மிக அதிகமான திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் மட்டுமே தோன்றியுள்ளார்.

கடந்த 2009ல் இயக்குனர் சுசிந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வரும் புரோட்டா காமெடி மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் காமெடியனாக நடிக்க தொடங்கிய சூரி, தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிக்கராக உள்ளார்.

இந்நிலையில் இவரின் ஆரம்ப காலங்களில் படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

அப்படி இவர் நடித்துள்ள தொடர் தான் திருமதி செல்வம், மிகவும் பிரபலமான இந்த தொடரில் நடிகர் சூரி மெக்கானிக்காக நடித்துள்ளார்.

தற்போது அந்த தொடரில் நடிகர் சஞிவ்வுடன் சூரி மெக்கானிக்க பையனாக நடித்திருக்கும் புகைப்படங்கள், தற்போது இணைத்தளத்தில் வைரலாகி வருகிறது.