Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடன் தொலையால் தற்கொலைக்கு முயன்ற ராஜா ரவிந்திரா! காப்பாற்றிய பிரபல நடிகர்..

நடிகர் பிரகாஷ் ராஜ் தென்னிந்திய அளவில் பெரிதும் மதிக்கப்படும் நடிகர்களில் ஒருவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

மேலும், தற்போது இவர் தனது மாநிலத்தில் தனிக் கட்சி ஒன்றை தொடங்கி, அதன் வேலைகளில் மிகவும் மும்மரமாக செயல்ப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகரான ராஜா ரவிந்திரா தற்கொலைக்கு முயன்றபோது நடிகர் பிரகாஷ் ராஜ் காப்பாற்றியதாக கூறியுள்ளார்.

மேலும், நடிகர் ராஜா ரவிந்திரா தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக விளங்கியவர். மேலும், தெலுங்கில் மிக அதிகமான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் ராஜா ரவிந்திரா ஒரு பேட்டியில் இது குறித்து கூறுகையில், “சில வருடங்களுக்கு முன் நான் கடன் தொல்லையால் கஷ்டத்தில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றேன்,

அப்போது நடிகர் பிரகாஷ் ராஜ் என்னை அழைத்து தற்கொலைக்கு எதிராக அறிவுரை கொடுத்தார்.மேலும், அவரே எனது கடனை அடைத்தார், என பிரகாஷ் ராஜ் தன்னை காபாற்றியது குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.