Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ஒன்னும் அவங்க அப்பா உதவியால் வரவில்லை, மாஸ்டர் பட நடிகர் அதிரடி பேட்டி

லோகேஷ் கனகராஜ் எனும் இளம் இயக்குனரின் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முறை நடிகை மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன், சாந்தனு, kpy தீனா, ஸ்ரீநாத், சீமான் உள்ளிட்ட பலர் நடித்து முடித்துள்ளனர்.

சமீபத்தில் தான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக சிறப்பான முறையில் நடந்து முடிந்தது.

இதனை தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கூடிய விஷயம் படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தான்.

இப்படத்தில் தமிழ் திரையுலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ளார்.

இவர் அண்மையில் அளித்த பேட்டியில் "விஜய் சார் ஒன்னும் அவங்க அப்பாவோட உதவியால் வரவில்லை. அவர் அவருடைய கடின உழைப்பினாலும், அதை போல் தான் தல அஜித்தும், இவர்கள் இருவருமே தங்களது விட முயற்சியினால் தான் திரையுலகில் மிக பெரிய இடத்தில திகழ்ந்து வருகிறார்கள்" என்று வெளிப்படையாக கூறினார்.