Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிர்பயா கேஸ் ஓகே! பொள்ளாச்சி கேஸ்க்கு எப்போது நீதி கிடைக்கும்! நடிகரின் அதிரடியான பதிவு

நேற்று நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் வரவேற்றனர்.

இறந்து போன நிர்பயாவின் கடைசி ஆசையான குற்றவாளிகள் தப்பித்துவிடக்கூடாது, தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் தாய் 7 வருடங்களாக போராடி குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இந்த தீர்ப்பை வரவேற்று சினிமா பிரபலங்களும் பதிவிட்டுவந்தனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி 8 வருடங்களுக்கு பின் நிர்பயாவுக்கு நீதி கிடைத்து விட்டது.

பொள்ளாச்சி வழக்கில் நீதி கொடுத்து இன்னும் எவ்வளவு காலம் எடுத்துக்கொள்வார்கள்? ஏற்கனவே வருடம் கடந்துவிட்டது, இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடத்தை மறக்க முடியாது, எப்பொழுதும் பாதுகாப்பாக இருங்கள் என கூறியுள்ளார்.