Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவ்வை சண்முகியில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் முதலில் இந்த முன்னணி நடிகர் நடிக்கவிருந்தது, புகைப்படம் உள்ளே.

நடிகர் கமல்ஹாசன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ஒருவர்.

அதற்கு சான்று அவரின் நடிப்பில் வெளியான படங்களே அவர் எப்படிப்பட்ட நடிகர் என்று கூறிவிடும்.

தற்போது இவர் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 1996 ல் வெளியான அவ்வை சண்முகி திரைப்படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மீனா, ஜெமினி கனேசன், நாகேஷ், டெல்லி கனேஷ், மணிவண்ணன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

இந்நிலையில் அவ்வை சண்முகி திரைப்படத்தில் ஜெமினி கனேசன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் சிவாஜி தான் நடிக்கவிருந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.

இதை கண்ட ரசிகர்கள் பலர் அந்த வேடத்தில் நடிகர் சிவாஜி நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கூற, இதற்கு சில ரசிகர்கள் இல்லை ஜெமினி கனேசனும் சிறப்பாக நடித்திருந்தார் என பதிலளித்துள்ளார்.