Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டாப் ஹீரோக்களின் படங்களின் டாப் 5 வரிசையில் இடம் பிடித்த கவின், என்னது! இந்த டாப் ஹீரோவை முந்திவிட்டாரா?

சரவணன் மீனாட்சி எனும் தொடரின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் தனது சிறந்த நடிப்பினால் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் கவின்.

இதனை தொடர்ந்து, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, பிக் பாஸ் சீசன் 3யில் 17 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் இவர் பல விதமான சர்ச்சைகளில் சிக்கியதை நாம் தொலைக்காட்சி மூலமாக பார்த்தோம்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த விஷயங்கள் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பு கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டுளை இவர் வெல்ல வில்லை என்றாலும், பல ரசிகர்களின் மனதை இவர் வென்றுவிட்டார்.

இந்நிலையில் இவர் நிகழ்ச்சிக்குள் வருவதற்கு முன் நட்புன என்னான்னு தெரியுமா என்ற திரைப்படத்தில் நடித்து விட்டு தான் வந்தார்.

இதன்பின் தற்போது தனது இரண்டாம் படமாக லிப்ட் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்துள்ளார்.

இவர் விஜய் நடித்து வெளிவந்த பிகில் திரைப்படத்தில் தென்றல் எனும் கதாபத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் First லுக் சமீபத்தில் தான் வெளிவந்திருந்தது. ஆனால் இந்த First லுக் வெளிவருவதற்கு முன்பே இப்படத்தின் டைட்டுளை வைத்து கவினின் ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரென்ட் செய்ய துவங்கிவிட்டனர்.

இதில் இப்படத்தின் டைட்டில் ரசிகர்கள் டுவிட் செய்ததில் 1.15 மில்லியன் டுவிட்களை பெற்றுள்ளது.

இதனால் தற்போது அதிகம் டுவிட் செய்யப்பட்ட தமிழ் படங்களின் டைட்டில் வரிசையில் கவினின் லிப்ட் படம் 5ஆம் இடத்தை பிடித்துள்ளது என்று சில தகவல்கள் கசிந்துள்ளது.

வலிமை - 3.1 மில்லியன்

மாஸ்டர் - 2.9 மில்லியன்

பிகில் - 2.2 மில்லியன்

சர்கார் - 1.2 மில்லியன்

லிப்ட் - 1.15 மில்லியன்

சூரரை போற்று - 1 மில்லியன்

இதில் சூர்யாவின் சூரரை போற்று படத்தின் டைட்டில் டுவிட் செய்த சாதனையை கவினின் லிப்ட் திரைப்படம் முறியடித்துள்ளது என்று சில தகவல்கள் கசிந்துள்ளது.