Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாம் அனைவரும் இதை செய்தால், கொரோனா பரவமால் தடுக்கலாம் - நடிகர் ரஜினியின் பதிவு..

தற்போது நிலவும் சூழலில் திரையுலகை சேர்ந்த பலரும் கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு வரவழைக்க போராடி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் COVID-19 குறித்து எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது கட்டத்தில் உள்ளது, இது 12லிருந்து 14 நெரம் வரை பரவாமல் இருந்தால், இதை மூன்றாவது கட்டத்திற்கு செல்லாமல் தடுக்க முடியும்.

எனவே நாம் அனைவரும் 22ம் தேதி பிரதமர் மோடி கூறியபடி ஊரடங்கு உத்தரவை பின்பிற்றினால், இதை மூன்றாவது கட்டத்திற்கு செல்லாமல் தடுக்க முடியும்” என கூறியுள்ளார்.