Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாரும் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம், ப்ளீஸ்.. நடிகர் தனுஷ் வேண்டுகோள்

தற்போது நாடு முழுவதும் பரவி கொண்டு, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் விஷயம் கொரானா வைரஸ்.

பல நாடுகளும் மக்களிடையே இந்த கொடிய விஷம் பரவ கூடாது என்று பல விதமாக விழிப்புணர்வுகளை செய்து வருகின்றனர்.

ஆம் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைபேசி மூலமாகவும் அந்தெந்த அரசு தங்களது நாடுகளுக்கு விழிப்புணர்வுவை ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் இதனை குறித்து பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து பல நடிகர் நடிகைகளும் தங்களது கருத்துக்களையும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது கொரானா குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதில் குறிப்பாக யாரும் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம், அனைவரும் பொறுப்புடன் செயல்படுவோம் என்றும் கேட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ...