Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அடுத்தப்படத்தை இந்த இயக்குனரிடம் கொடுத்தால், அஜித் மட்டுமே படைக்கவிருக்கும் சாதனை

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.

இந்நிலையில் அஜித் ஏற்கனவே விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு ஹிட் படங்களை கொடுத்து இருந்தார்.

அதை தொடர்ந்து இவர் வலிமை ஹிட் கொடுத்தால் ஹாட்ரிக் ஹிட் தான், அந்த வகையில் படத்தின் ரிசல்ட் எப்படியிருக்கும் என்பதை பார்க்க தீபாவளி வரை காத்திருப்போம்.

தற்போது அஜித் இறுதிச்சுற்று சுதாவிடம் கதை கேட்பதாக ஒரு தகவல் வந்தது, அதை நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.

இதை தொடர்ந்து அப்படி அஜித் சுதா படத்தில் கமிட் ஆனால், கண்டிப்பாக அஜித் ஒரு சாதனை படைக்கவுள்ளார் தான்.

ஆம், தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் அஜித் மட்டுமே பெண் இயக்குனர் இயக்கத்தில் இங்கிலிஷ் விங்கிலிஷ், உயிரோடு உயிராக என்று இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

மூன்றாவதாக இதில் நடித்தால் அதுவும் ஒரு சாதனையே, பொறுத்திருந்து பார்ப்போம். தனுஷ் இதற்கு முன்பு சௌந்தர்யா, ஐஸ்வர்யா ஆகியோர் இயக்கத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.