Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆண் போலிசாரிடம் தவறாக நடந்து கொண்ட பெண்! வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகர்

நாடு முழுக்க கொரோனா வைரஸ் நோய் தொற்று மக்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதனால் மக்களை தனித்திருக்குமாறு வலியுறுத்திய அரசு ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதே வேளையில் வாகனங்கள், சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் மக்கள் அரசு கூறிய முறைகளை பின்பற்றுமாறு வீடியோ மூலம் கூறிவருகிறார்கள்.

ஆனால் அதையும் மீறி சிலர் பொறுப்பற்ற தனமாய் பொது இடங்களில் உலாவுவது பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரும் விவேகம் படத்தின் வில்லனுமான நடிகர் விவேக் ஓபராய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் சாலையில் சென்ற காரை நிறுத்தி போலிசார் சோதனை செய்த போது காருக்குள் இருந்து வெளியே வந்த பெண் ஆண் காவலரிடம் தவறாக நடந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.