Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் ரிலீஸ் நாளில் மாஸான பிளான்! ஆனால் யோகி பாபுவை திணற வைத்த சம்பவம்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸை நோக்கி ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால் படக்குழு திட்டமிட்டது போல படம் வெளியாகுமா என்பதில் மிகுந்த கேள்விக்குறி எழுந்துள்ளது.

ஆம் ஏப்ரல் 9 ம் தேதி வெளியாக இருக்கும் மாஸ்டர் படம் தற்போது நாட்டில் நிலவும் கொரோனா பிரச்சனையால் கேள்விக்குறியாக உள்ளது.

இதே நாளில் காமெடி நடிகர் யோகி பாபு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் இதுவும் கொரோனா பிரச்சனையால் கேள்விக்குறியாகியுள்ளது.

அண்மையில் அவர் மிக எளிமையாக மஞ்சு பார்கவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

இது குறித்து அவர் இணையதளத்தில் வரவேற்பை சிறப்பாக நடத்த இருக்கிறேன். ஆனால் தற்போது நிலவரத்தை பார்த்தால் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என கூறியுள்ளார்.

பின் அவரே அப்பதிவை நீக்கியுள்ளார்.

loading...