Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட பட நடிகருக்கு கல்யாணம்! ஆனால் எதிர்பாராத அவசர முடிவு - மணமகள் இவர் தானாம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான படம் பேட்ட.

இப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தவர் மணிகண்டன் ஆச்சாரி. மலையாளத்தில் வந்த கம்மாட்டி பாடம் என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்.

அவருக்கும் அஞ்சலி என்ற பெண்ணுக்கும் வரும் ஏப்ரல் 26 ம் தேதி திருமணம் நடத்த சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் கொரோனாவால் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையால் சமூக பொறுப்புடன் கூட்டத்தை தவிர்க்க அவர் முடிவு செய்துள்ளாராம்.

அதே வேளை திட்டமிட்ட தேதியில் மிகு முக்கியமான குடும்ப உறவினர்கள் முன்னிலையில் ஆடம்பரமின்றி திருமணம் நடத்த அவர் முடிவு செய்துள்ளாராம்.

அவரின் இப்படியான சமூக பொறுப்பை பலரும் பாராட்டி வருவதோடு மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

loading...