Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை யாரும் அளிக்காத தொகையை கொரோனா நிதியுதவியாக அளித்த பிரபாஸ், எத்தனை கோடிகள் தெரியுமா?

நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் அறியப்படும் மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர். இவரின் திரைப்படங்கள் இந்திய முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகும்.

ஈஸ்வர் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

மேலும், பிரம்மாண்ட இயக்கரான ராஜா மௌலியின் இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் அவரை தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகியது.

இதனையடுத்து பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி இமாலய வெற்றியடைந்தது, அப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்தார்.

மேலும், இவரின் நடிப்பில் சென்ற வருடம் வெளியான சாஹோ திரைப்படமும் இந்திய அளவில் மிக பிரம்மாண்டாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்குனர் ராதா கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக திரையுலகை சேர்ந்த பலரும் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றனர். பவன் கல்யாண், சிரஞ்சிவி, மகேஷ்பாபு, ராம் சரண் உள்ளிட்ட தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகர்கள். மத்திய மற்றும் மாநில அரசுக்கு தங்களது நிதியுதவியை அளித்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது நடிகர் பிரபாஸ் 4 கோடியை நிதியுதவியாக அளித்துள்ளார். மத்திய அரசுக்கு 3 கோடி நிதியுதவியும், அந்திரா மற்றும் தெலுங்கான மாநில அரசுக்கு தலா 50 லட்சமும் தந்துள்ளார், என தகவல்கள் வெளியாகியுள்ளது.

loading...