Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இறுதி சடங்கில் கேட்ட அந்த ஒரு குரல்! அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய நடிகரின் மரணம்

மருத்துவர்கள் மனிதர்களின் உயிரை காப்பாற்றும் கடவுளாக கருதப்படுகிறார்கள். ஆனால் காலம் யாரையும் வீட்டுவைப்பதில்லை. பாகுபாடில்லாமல் தன் கணக்கை சரி செய்து விடுகிறது என கூறலாம்.

அப்படியாக தான் பலரையும் புலம்ப வைத்துள்ளது நடிகர், மருத்துவர் சேதுவின் மரணம். நேற்று இரவு அவர் இருதய அடைப்பால் காலமானதாக செய்திகள் வெளியானது.

இதிலிருந்து திரைத்துறை வட்டாரத்தினரின் முகம் வாடிவிட்டது. குடும்பத்தாரின் முகத்தில் கண்ணீர் சூழ்ந்துவிட்டது.

அவரின் நெருங்கிய நண்பரான நடிகர் சந்தானம், நடிகை குஷ்பூ ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

சென்னையில் அவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பூத உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது பின் எடுத்துச்செல்லப்பட்டது.

அப்போது வீட்டின் வாசலில் அவரின் தாய் இந்த கேட் வழியாக தான் பல தடவை போய் வருவ என் தங்கம், அய்யா சேது என கதற, மனைவி சேதுவுக்கு கன்னத்தில் முத்தமிட, பின் ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டிருந்த உடலை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு கதறினார்.