Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹேய் செல்லம்! பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜின் மகனா இது! க்யூட்டான போட்டோ இதோ

தமிழ் சினிமாவில் வில்லனாக பல படங்களில் கலக்கியவர் நடிகர் பிரகாஷ் ராஜ். அவரை தெரியாதவர்கள் தென்னிந்திய சினிமாவில் இருக்க முடியாது. அப்படியாக பல மொழிகளில் படங்களில் நடித்தவர் அசத்தியவர்.

விஜய், திரிஷா நடித்த கில்லி படத்தின் ஹேய் செல்லம் என்ற அந்த ஒரு வசனம் மூலம் பிரபலமானார். வருடங்கள் கடந்து எத்தனையோ படங்களில் அவர் நடித்து வரும் வேளையிலும் அந்த ஒரு வசனமே அவருக்கான அடையாளமாக இந்த தலைமுறையினர் மத்தியில் பதிந்துவிட்டது.

அரசியலிலும் இறங்கிவிட்ட அவர் கர்நாடகா தேர்தலில் சுயேட்சையாக நின்று தோல்வி அடைந்த போதும் அவர் மக்களுக்காக பல நல்ல விசயங்களை செய்து வருகிறார்.

கொரோனா வந்த இந்த சூழ்நிலையிலும் அவர் தன்னுடைய வீடு, அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளத்தை முன் கூட்டியே கொடுத்துள்ளார்.

அவருக்கு லலிதா குமாரி என்பவருடன் திருமணமாகி பின் 2009 ல் இருவரும் பிரிந்தனர். பின் போனி வெர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பிரகாஷ் ராஜுக்கு மேக்னா, பூஜா, சித்து, வேதாந்த் என அவருக்கு குழந்தைகள் இருக்கிறார்கள்.

அவரின் மகனும் வீட்டிலிருந்தே யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.