Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இறுதி சடங்கில் நடந்த சோகம்! யாருக்கும் இது போல வரக்கூடாது! மனதை வலிக்கச் செய்த காட்சி

2013 ல் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஒரு ஹீரோவாக அறிமுகமானவர் டாக்டர் சேதுராமன். நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடித்திருந்தார்.

பின் வாலிப ராஜா, 50/50 ஆகியபடங்களில் நடித்திருந்தார். தன் சொந்த வாழ்க்கையில் தோல் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வந்த அவர் நேற்று முன் தினம் மாரடைப்பால் காலமானார்.

34 வயதில் அவர் இறந்தது திரைத்துறை மட்டுமல்ல மருத்துவத்துறை வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின் நேற்று மதியம் அவரின் இறுதி சடங்கு நிகழ்வுகள் நடத்தப்பட்டு பின் உடல் தகனம் செய்யப்பட்டது.

நடிகர் சந்தானம் தன் நணபரான சேதுவை இழந்த சோகத்தில் கண்ணீரும், சோகம் கலந்த முகத்துடனேயே காணப்பட்டார். மேலும் வீட்டிலிருந்து சேதுவின் உடலை எடுத்துச்செல்கையில் சேதுவின் நண்பரான சந்தானம் சுமந்து சென்றார்.

தோளில் கை போட்டு நடந்து செல்வதற்கு பதிலாக பூத உடலை நண்பனாக சுமந்து சென்ற இந்த காட்சி பலரையும் உருக வைத்தது. ஒரு நண்பனாக யாருக்கும் இப்படி ஒரு சோகம் வரக்கூடாதது தான்.