Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் பட குழுவினர்களை போல் இந்த பிரபல நடிகர்களும் வீடியோ காலில் பேசியுள்ளனர், யார் யார் தெரியுமா..

சீனா நாட்டில் முதலில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பல அயிரம் மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால், மத்திய அரசு இதை கட்டுபடுத்த 21 நாட்களுக்கு அனைவரும் வீட்டிலேயே இருக்கும் படி உரடங்கு சட்டம் போடப்பட்டது.

அதனை தொடர்ந்து திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களும் மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அதை அவர்களும் பின்பற்றி வருகின்றனர்.

அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தின் படகுழுவினர்கள் சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய், அனிருத், நடிகை மாளவிகா மற்றும் துணை தாயாரிப்பாளர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் வீடியோ காலில் பேசிக்கொள்ளும் புகைப்படம் வைரலானது,

அந்த வரிசையில் தற்போது பிரபல மலையாள நடிகர்களான பிரித்விராஜ், ஜெயசூர்யா, இந்திரஜித் மற்றும் நரேன் உள்ளிட்டோர் சமுக விலகலில் இருக்கும் வகையில் வீடியோ காலில் பேசிக்கொள்ளும் புகைப்படம் வெளியாகியுள்ளது.