Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த பிரபல நடிகர் சொன்ன ஒரு வார்த்தை தான் சூர்யா வாழ்க்கையை மாற்றியதாம், யார் என்ன சொன்னார் தெரியுமா?

சூர்யா இன்று தமிழகமே கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் சூரரைப் போற்று படம் தயாராகியுள்ளது.

இந்த கொரோனா பிரச்சனை முடிந்து இப்படம் வெளிவரும் என தெரிகிறது. இந்நிலையில் சூர்யா நடிக்க வந்த போது உயிரிலே கலந்து என்ற படத்தில் நடித்தாராம், அப்போது படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் தூங்கிக்கொண்டு இருந்தாராம்.

அப்போது அப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ரகுவரன் சூர்யாவை அழைத்து ஒரு அட்வைஸ் செய்தாராம். நீ வளரும் சமயத்தில் இருக்கிறாய், சினிமாவில் வெற்றி என்பதை பார்க்கும் வரை உனக்கு தூக்கமே வரக்கூடாது என்றாராம். அன்றிலிருந்து சூர்யா படப்பிடிப்பில் தூங்கியதே இல்லையாம்.