Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரோனாவால் அப்பா மரணம்! உயிருக்கு போராடும் அம்மா! கண்ணீர் விட்ட நடிகரின் பதிவு

கொரோனா வைரஸ் இந்த 2020 ம் ஆண்டில் மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ஒரு மோசமான காலகட்டம் என்றே சொல்ல வேண்டும். உலகளவில் இதன் தாக்கம் பெரிதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஃபிலிப்பினோ அமெரிக்க நடிகரான Nico Santos அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் தன்னுடைய வளர்ப்பு தந்தை ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துவிட்டதாகவும், அம்மா தற்போது உயிருக்கு போராடி வருவதாகவும் கூறியுள்ளார்.

வளர்ப்பு தந்தையின் கடைசி நாட்களில் அவருடன் இருக்க கொடுத்து வைக்கவில்லை. நோய் தொற்று காரணம் கருதி தள்ளியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

என் தம்பியை என்னால் கட்டிப்பிடிக்க முடியவில்லை. என் உறவு முறைகளின் கண்ணீரை துடைக்க முடியவில்லை. இக்கட்டான நேரத்தில் பிரார்த்தனை செய்து அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி. என் அம்மாவுக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன், பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன் கூறியுள்ளார்..