Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்காக களத்தில் இறங்கிய பிரபல நடிகரின் ரசிகர்கள்! பலரும் பாராட்டிய செயல் - போட்டோ இதோ

கொரோனா உலகளவில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கானோரை பாதிப்படையச்செய்துள்ளது. தீவிர போராட்டத்திற்கு பின் சிலர் உயிர் பிழைத்து வந்துள்ளனர்.

இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் அனைத்து மக்களின் தொழில்களும், பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் மக்களின் உணவுத்தேவையும் சிக்கலான சூழ்நிலையாகியுள்ளது. இந்நிலையில் பலர் தன்னார்வலர்களாக பொதுமக்களுக்கு உதவ முன் வந்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனவே சினிமா தொழிலாளர்களுக்கு ரூ 50 லட்சம் கொரோனா நிவாரண உதவி தொகையாக வழங்கினார்.

இந்நிலையில் மதுரை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு சாப்பாட்டு அரிசி வழங்கப்பட்டுள்ளது.