Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித் குறித்து கமல் ஹாசன் கூறியது, இதுவரை யாருக்கும் தெரியாத ஒன்று

தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்களில் டாப் ஹீரோக்களில் ஒருவர்கள் கமல் ஹாசன் மற்றும் அஜித்.

தல அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.

உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் அஜித் குமாரை பற்றி பலரும் தங்களது கருத்துக்களை பல இடங்களில் தெரிவிப்பார்கள்.

ஏன் சமீபத்தில் நடந்த மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் கூட தளபதி விஜய் "நண்பர் அஜித்" என்று கூறினார்.

அந்த வகையில் பல வருடங்களுக்கு முன் கமல் ஹாசன் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பேசிய போது "என் மகள் ஸ்ருதி ஹாசன் வேதாளம் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்து என்னிடம் கூறியது 'அஜித் ஒரு ஜென்டில் மேன் என்று' என" கூறினார்.