வேலைக்காரன் படத்தின் காப்பியா? 9 மணி 9 நிமிடம் விளக்கு ஏற்றுவது குறித்து பிரபலங்கள் ரியாக்ஷன்!
கொரோனா நோய் தொற்று தாக்கத்தால் 21 நாட்கள் ஊரடங்கு முறையை கடந்த 10 நாட்களுக்கு முன் பிறப்பிக்கப்பட்டது. அநேக மக்களும் பொறுப்புணர்ந்து அதை பின்பற்றி வந்தாலும் சிலர் அரசு உத்தரவை மீறி தண்டனைக்கு ஆளாகும் செய்தியையும் நாம் பார்த்து வருகிறோம்.
இந்திய பிரதமர் மோடி அண்மையில் ஏப்ரல் 5 ம் தேதி இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அனைத்துவிட்டு 9 நிமிடம் தீபம், மெழுகு வர்த்தி ஏற்று, டார்ச் லைட் அடித்து காட்ட சொன்னார்.
வழக்கம் போல கேலி கிண்டல் விமர்சனம் செய்து வந்த போதிலும் சினிமா பிரபலங்கள் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் கூறியது சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம் போல இருக்கிறது என விமர்சிக்கப்பட்டு வந்த வேளையில் அப்படத்தின் இயக்குனட்ர் மோக்ச்ன ராஜா பிரதமர் கூறியது குறித்து தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதில் அவர் ஒரு கலைஞனாக நான் மகிழ்ச்சியடைகிறேன். நேர்மறை ஆற்றலை பரப்ப தூண்டும் சக்தியாய் நான் இதை ஏற்றுக்கொள்கிறேன்.
சமூக பிரச்சனையை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
நடிகர் ஜீவாவும் பிரதமர் கூறிய படி தீப ஒளியேற்றி அனைவரும் கொரோனாவை எதிர்ப்போம் என கூறியுள்ளார்.