Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிறந்த நாள் கொண்ட பிரபல நடிகர் கொரோனாவால் மரணம்! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் உலகம் முழுக்க 12 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. இதனால் 80 ஆயிரத்திற்கும் மக்கள் இறந்துள்ளார்கள். சீனா தான் இவ்வளவு பெரிய ஆபத்திற்கு காரணம் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது.

ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த பல நடிகர்கள் நடிகைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றனர். இது குறித்து நாம் நமது தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்.

இந்நிலையில் ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர் ஜய் பெனடிக்ட் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் தான் அவர் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினாராம். இறந்தவருக்கு வயது 68. Aliens, The Dark Knight Rises, Foyle's War ஆகிய படங்களில் அவர் நடித்துள்ளராம். அவரின் மரணம் திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.