Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சசிகுமாரின் அடுத்த படம்! வசூலை வாரிக்குவித்து ஹிட் படத்தின் ரீமேக்காம் - ஹீரோயின் யார்

நாடோடிகள், சுப்பிரமணியபுரம் படங்களின் மூலம் நம் மனதை கவர்ந்தவர் நடிகர் சசிகுமார். அதன் பின் இவருக்கு படங்கள் வந்த பின்னும் பெரிதாக இடம் பிடிக்கவில்லை. இருப்பினும் அவரின் மீது ரசிகர்கள் நம்பிக்கை இருந்து வருகிறது. அடுத்ததாக சூப்பர் ஹிட்டாகி வசூலை வாரிக்குவித்த முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளாராம்.

1983 ல் பாக்யராஜ் இயக்கி ஹீரோவாக நடித்த முந்தானை முடிச்சு படத்தின் ஹீரோயினாக ஊர்வசி நடித்திருந்தார். இசைஞானி இளையராஜா இசையில் இப்படத்தின் பாடல்களும் ஹிட் தான்.

பட்டிதொட்டியெங்கும் ஒலித்த இப்படத்தை தற்போது பாக்யராஜே கதை, திரைக்கதை, வசனம் எழுத இளம் இயக்குனர் பாலாஜி இயக்குகிறாராம்.

தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்படுகிறதாம். ரீமேக் படத்தில் நடிப்பதற்காக நடிகர்கள், நடிகைகளுக்கான தேர்வும், படப்பிடிப்பும் விரைவில் தொடங்கபடவுள்ளதாம்.