Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜாக்கி சான் மூலம் சமாதான தூதுவிடும் சீனா! கொரோனாவின் பின்னணியா? சந்தேகிக்க வைத்த வீடியோ

சீனாவின் வுஹான் சந்தையிலிருந்து பரவிய கொரொனா வைரஸ் உலகம் முழுக்க 50 லட்சம் பேரை பாதித்துள்ளது. சுமார் 4 லட்சம் பேர உயிர் பலி கண்டுள்ளது.

இந்த பின்னணியில் பலவிதமாக கருத்துக்கள் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதே வேளையில் சீனாவும் உலகளவில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

அதை சரிசெய்ய பல முயற்சிகளையும், திட்டங்களையும் கையாண்டு வருகிறது. இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற சீன நடிகர் ஜாக்கி சான் மூலம் கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்களுக்கு அமைதி மற்றும் அன்பின் செய்தியை வழங்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது.

இதனை இந்தியாவின் சீன தூதர் தன்னுடைய டுவிட்டரில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சீனாவின் தூதர் வீடோங் ஜாக்கி சானின் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் இந்தியர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக வாழ்த்தியுள்ளார்.