Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் விஜய் சேதுபதிக்கு மாஸான ஆஃபர்! அட இந்த காம்பினேசனும் நல்லா இருக்கே

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருப்பவர் விஜய் சேதுபதி. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் கொரோனாவால் ரிலீஸ் தடையானதால் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி பேசிய விசயங்கள் குறித்து சர்ச்சைகள் அண்மையில் ஓடிக்கொண்டிருந்தன. சமீபத்தில் அவர் கமல்ஹாசனுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உறையாடினார்.

அப்போது அவர் இந்தியன் 2 படத்தில் கமலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன். இப்போது மீண்டும் வாய்ப்பு கேட்கிறேன் என பேசினார்.

இதனையடுத்து கமலுடன் தலைவன் இருக்கிறான் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வெளியானது.

இப்படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் விஜய் சேதுபதி கமலுக்கு வில்லனாக இப்படத்தில் நடிக்கிறார் என தெரிகிறது.

மேலும் இவர் தேவர் மகனில் கமலுக்கு நாசர் வில்லனாக வந்தது போல தலைவர் இருக்கிறான் படத்தில் நாசருக்கு மகனாக விஜய் சேதுபதி நடிக்கிறாராம்.