Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தெருவில் பழம் விற்கும் நிலைக்கு வந்த நடிகர்!..புகைப்படங்களுடன்

இந்தியாவில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறது. இதனால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலரும் இதனால் வேலை இல்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹிந்தியில் நடிகர் ஆயுஷ்மான் குரானாவுடன் ட்ரீம் கேர்ள்ஸ் திரைப்படத்தில் நடித்த சோலங்கி திவாகர் உரடங்கினால் பட வாய்ப்புகள் இல்லாமல், தனது தினசரி செலவிற்கு தெருவில் பழம் விற்று சம்பாதித்து வருகிறார்.

மேலும் பட வாய்ப்பு இல்லாததால் விட்டு வாடகை, செலவு போன்ற தேவைகளுக்காக, நான் எந்த பழம் விற்கும் தொழிலை செய்துவருவதாக தெரிவித்துள்ளார்.