Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் ராணாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவில்லையா? தந்தை அளித்த விளக்கம்

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான ராணா டகுபதிக்கு ஹைதராபாத்தை சேர்ந்த மிஹீகா என்றை பெண்ணை திருமணம் செய்யப்போவதாக சமூக வலைதளத்தில் கூறியிருந்தார்.

அண்மையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக புகைப்படத்துடன் தகவல்கள் வெளியாகின. சமூக வலைதளத்தில் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

இந்நிலையில் ராணாவின் அப்பா சுரேஷ் டகுபதி ராணா, மிஹீகா இருவருக்கும் நிச்சயதார்த்தம் இன்னும் நடைபெற வில்லை என்றும், திருமணத்திற்கு பிந்தைய மற்றும் முந்தைய நிகழ்ச்சிகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விவாதிக்க நடைபெற்ற இருகுடும்பங்களின் சந்திப்பே ஆகும். தெலுங்கு குடும்பங்களில் வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான் இது என அவரு கூறினார்.