Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்! ஒன்று கூடிய நடிகர்கள் - இதுவரை இல்லாத புது கண்டிசன்

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவால் ஊரடங்கு விதிக்கப்பட்டதால் படங்கள் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. சினிமா தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார். இதில் 200 தயாரிப்பாளர்கள் தலா ரூ 1 லட்சம் முதலீடு செய்து மொத்தம் ரூ 2 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கப்படுகிறதாம்.

இதில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பார்த்திபனும் நடிக்கிறாராம். மேலும் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்கிறாராம். படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்க அனைவருக்கும் வியாபாரத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுமாம்.

அதே போல 100 நாட்கள் படம் ஓடிய பின்னரே ஓடிடி தளத்தில் படம் வெளியாகுமாம். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையால் தான் இப்படி ஒரு முடிவாம்.