Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமூக சேவகர் நடிகர் ராகவா மாஸ்டருக்கு நேர்ந்த சோதனை! மாற்றுத்திறனாளி இல்லத்தில் கொரோனா யார் மூலம் வந்தது தெரியுமா

தமிழ் திரையுலகில் மிகுந்த பக்தியுடன் ஏழை எளிய மக்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் என பலருக்கு நிறைய உதவிகள் செய்து வருபவர் நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் மாஸ்டர்.

அண்மையில் கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து வறுமையில் வாடிய சினிமா ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் நிதியுதவி அளித்திருந்தார்.

அறக்கட்டளையின் கீழ் நிறைய குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்து கொடுத்து வருகிறார்.

சென்னையில் அசோக் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார்.

அத்தெருவில் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் இருந்த 30 பேரில் 20 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சென்னை லயோலா கல்லூரியில் தற்காலிக முகாமிற்கு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

விசாரணையில் சமையல் பணி செய்து வந்த பெண்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.