Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

களத்தில் இறங்கும் வடிவேலு! ரசிகர்களே ரெடியா - அட்ரா சக்க சிங்கம் வந்தாச்சு

தன் நகைச்சுவையாலும், உடல் மொழியாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. கடைசியாக ரசிகர்கள் அனைவரும் அவரை விஜய்யுடன் மெர்சல் படத்தில் பார்த்தனர். அதன் பின் 24 ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால் அவர் மீது தடை விதிக்கப்பட்டது.

ஆனாலும் ரசிகர்கள் அவரை கைவிடுவதாக இல்லை. அவரை மீண்டும் திரையில் காணும் ஆர்வத்தில் இருக்கிறார்கள். கொரோனாவால் தற்போது சினிமா படப்பிடிப்புகள் ஏதும் நடைபெறவில்லை.

இந்நிலையில் வடிவேலு இணையதள தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளாராம். இதை அவருடன் பணியாற்றிய ஒருவர் இயக்கவுள்ளாராம். கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்த பின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகவுள்ளதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளதாம்.