Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்யை நினைத்து இயக்குனர் மிஷ்கின் எழுதிய கதை, பின் வேறுவொருவர் நடித்து ஹிட்டான திரைப்படம்!..

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக திகழ்பவர். இவரின் திரைப்படங்கள் அடுத்தடுத்து பெரிய அளவில் வசூல் சாதனைகளை செய்துவருகிறது.

சென்ற வருடம் இவர் நடித்து வெளியான பிகில் திரைப்படமும் பிளாக் பஸ்டர் ஆனது. அதனை தொடர்ந்து தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் முதலில் வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படத்தை நடிகர் விஜய்காக தான் எழுதினாராம்.

அந்த திரைப்படத்தின் ப்ரீவியூ ஷோவை பார்த்துவிட்டு நடிகர் விஜய், இதேபோல் கதையை ரெடி பண்ணுங்க, நாம் படம் பண்ணலாம் என கூறியுள்ளார். இதற்கு மிஷ்கின் இந்த கதை உங்களுக்காக தான் எழுதியது.

பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக உங்களிடம் குறை முடியவில்லை என கூறியுள்ளார். இதற்கு விஜய் மிகவும் வருத்தப்பட்டதாகவும் ஒரு பேட்டியில் இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார்.