Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலிமை படம் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்ட செய்தி! மேலும் ஒரு ஸ்பெஷல் இதோ

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வந்த படம் வலிமை. ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இப்படம் எடுக்கப்பட்டு வந்தநிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பின் அஜித்துடம் வலிமை படத்தில் பணிபுரியும் அனைவரின் பாதுகாப்பே நமக்கு முக்கியம், கொரோனா பாதிப்பு முடிந்த பின் படப்பிடிப்பை தொடரலாம் என தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் வினோத்திடம் அண்மையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் அஜித் நடித்து வரும் வலிமை படம் பெரிய ஆக்‌ஷன் படம். அவருக்கு இது 60 வது படம். இப்படத்தின் 50 சதவீதம் படப்பிடிப்புகள் முடிவடைந்ததுள்ளது.

பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் படம் போல தெலுங்கிலும் வக்கில் சாப் என்ற பெயரில் எடுக்கப்பட்டுவருகிறது. இரண்டு வருடங்கள் கழித்து பவன் கல்யாண் திரையில் வருகிறார். இன்னும் 10 - 15 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது.