Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்திய அளவில் ட்ரெண்டான #5DecadesOfSuperstarRAJINI, ரஜினி ரசிகர்களை வம்புக்கு இழுத்த விஜய் ரசிகர்கள்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர். மேலும் இவர் சினிமாவிற்கு நடிக்க வந்து 45 வருடங்கள் ஆகியுள்ளது.

இதனை கொண்டாடும் வகையில் ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் #5DecadesOfSuperstarRAJINI என்ற ஹாஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தனர்.

மேலும் இந்த ஹாஷ்டேகில் திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் ட்வீட் செய்திருந்தனர். ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது பல நடிகர்களின் ரசிகர்களும் இதனை ட்ரெண்ட் செய்தனர்.

ஆனால் விஜய் ரசிகர்கள் மட்டும் அவர்களுக்கு போட்டியாக #ரஜினியை_வீழ்த்திய_விஜய் என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். இதனால் இருதரப்பு ரசிகர்களிடையே தற்போது மோதல் நடந்து வருகிறது.