Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகர்கள் மீது வடிவேலு புகார், கோலிவுட்டில் பரபரப்பு

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர் வடிவேலு. இவர் கடந்த சில வருடங்களகவே சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்துவிற்கும் ஏற்கனவே பல பிரச்சனைகள் நடந்து வந்தது.

இதை தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி, பேசி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் மனோபாலா நடிகர் சிங்கமுத்துவை பேட்டி எடுத்தார்.

அதில் வடிவேலு பற்றி சிங்கமுத்து பல தகவல்களை கூறினார், அதில் வடிவேலுவை நான் தான் ஆளாக்கிவிட்டேன்.

அவருக்கு ஒன்னுமே தெரியாது, நான் தான் இடமெல்லாம் வாங்கி கொடுத்து பெரியாள் ஆக்கினேன் என்று பேசியுள்ளார்.

இதற்காக தான் பெயரை தேவையில்லாமல் இழுத்து கெடுக்கும் வகையில் பேசியுள்ளனர் என்று சிங்கமுத்து, மனோபாலா மீது வடிவேலு புகார் கொடுத்துள்ளார்.