Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரோனாவிலிருந்து உயிர்தப்பித்த பிரபல நடிகர்! மனைவியிடம் சொன்னது

2020 ம் மறக்க முடியாத வருடமாக ஆண்டின் தொடக்கத்திலேயே கொரோனா வைரஸ் நோய் உலகையே புரட்டி போட்டுவிட்டது.இந்தியாவில் இதுவரை சுமார் 5 ஆயிரம் பேர் இந்நோயால் இறந்துள்ளார்கள். 1.90 லட்சம் பேர் வைரஸ் தொற்றிற்கு ஆளாகியுள்ளார்கள். ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்த போதும் வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகமாகிவருகிறது.

சினிமா பிரபலங்கள் சிலரும் இந்நோயால் பாதிக்கப்பட்டனர். அண்மையில் ஹிந்தி சினிமாவின் முக்கிய நடிகர் கிரண் குமார் வைரஸ் தொற்றுக்கு ஆளானார்.

இந்நிலையில் அவர் தன்னை முழுமையாக தனிமைப்படுத்தி கொண்டு உரிய மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு தற்போது முழுவதுமாக குணமடைந்துள்ளாராம்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் இந்நோயால் பல தொந்தரவுகளை சந்தித்ததால் அதிர்ச்சி அடைந்ததாகவும், ஆனாலும் அதை ஏற்றுக்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வாழப்பழகியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தன் மனைவியிடம் தான் சாப்பிட்ட பின் குப்பையில் தூக்கி எறியும் முறையில் உணவை அனுப்பி வைக்கும் படி கூறியதோடு, மாடிப்படியில் உணவை வைத்துவிடுவார்களாம், இவர் போய் தனியே எடுத்துக்கொண்டதாகவும், யாருடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்ததாகவும், தன் படுக்கையறையை தானே சுத்தம் செய்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.