Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இறந்த தாயை எழுப்ப முயன்ற பச்சிளம் குழந்தை, தத்தெடுத்த பிரபல முன்னணி நடிகர்

குஜராத்திலிருந்து பீகார் முசாபூருக்கு சென்ற பெண் ஒருவர், முசாபூர் ரயில் நிலையத்தை அடையும் முன் உயிரிழந்தார். இதன்பின் முசாபர் ரயில் நிலையத்தில் இறந்த பெண்ணின் உடல் போர்வையால் மூடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தனது தாய் இறந்தது கூட தெரியாமல் அவருடைய 2 வயது பச்சிளம் குழந்தை அவர் மேல் மூடப்பட்டிருந்த போர்வையை எடுத்துவிட்டு, அவரை எழுப்ப முயற்சித்தது. இதுகுறித்து வெளிவந்த வீடியோ தற்போது நாடு முழுவதும் மிகவும் பரவலாக வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இறந்த தனது தாயை எழுப்ப முயன்ற 2 வயது சிறு குழந்தையை பிரபல பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானின் 'மீர்' பவுண்டேஷன் தத்து எடுத்துள்ளது. இந்த தகவலை ஷாருக்கான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.