Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் விஜய்யின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கவுள்ள பிக் பாஸ் தயாரிப்பு நிறுவனம், வெளியான மாஸ் தகவல்..

தளபதி விஜய்யின் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் பெரிய வெற்றியடைந்தது. அதன்பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவரின் அடுத்த திரைப்படமான தளபதி 65 யை பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், இ்தனை இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளதாவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் தளபதி 66 திரைப்படத்தை பிக் பாஸ் போன்ற இந்திய அளவில் பல நிகழ்ச்சிகளை தயாரித்து வரும் பிரபல நிறுவனமான எண்டேமோல் ஷைன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தை மிக பெரிய பட்ஜெட்டில் உருவாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.