Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தை தேர்ந்தெடுத்த முன்னணி பாலிவுட் இயக்குனர், ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்து ஆகஸ்டில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர் அனுராக் ஒரு வெப் சீரிஸ் எடுத்துள்ளார்.

அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இவர், தமிழ் நடிகர்கள் பலர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இதில் தான் இயக்கிய சீக்ரட் கேம்ஸ் வெப் சீரிஸிற்கு தமிழில் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை ரசிகர்கள் மிக ஆவலுடன் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.