விஜய் ரசிகர்கள் செய்த மாஸான செயல்! காவல் துறை பாராட்டு - பலரின் கவனத்த ஈர்த்த விசயம்
விஜய்யின் மாஸ்டர் படத்தை தீபாவளிக்கு எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதே வேளையில் கொரோனா நிலைமை இன்னும் சீராகாமல் இருப்பதால் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாதளவிற்கு இருக்கிறது.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அண்மையில் விஜய்யின் பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடினர். விஜய்யும் எந்த ஆரவாரமும் வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.
சமூக வலைதளத்தில் டிரெண்டிங் செய்து அசத்தி காட்டினர். அதே வேளையில் நெல்லை மாவட்ட ரசிகர்கள் கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம், சாலை தடுப்பு பேரிகேடுகள் என வழங்கியுள்ளனர்.
இதனால் நெல்லை மாவட்ட காவல் அதிகாரி அர்ஜூன் சரவணன் விஜய் ரசிகர்களை வாழ்த்தியுள்ளார்.
திரு விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு (ஜூன் 22) நெல்லை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்காக பேரிகார்டுகளை வழங்கிய நெல்லை மாவட்ட தலைமை இணையதள விஜய் மக்கள் இயக்கத்திற்கு @NellaiVMI_Off மனமார்ந்த நன்றி.
— Arjun Saravanan (@ArjunSaravanan5) June 28, 2020
உங்கள் சமூக பார்வை தொடரட்டும் . மற்றவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளீர்கள். pic.twitter.com/xP7PenVhn8