இயக்குனருக்காக அந்த விஜய் படம் நடித்தேன், பிறகு விஜய் படம் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன், பிரபல நடிகர் விளாசல்..!
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். இவர் லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் திரைக்கு வந்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்நிலையில் விஜய் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் போக்கிரி.
இப்படத்தில் நடிகர் நெப்போலியன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்த கதாபாத்திரம் அவர் இயக்குனர் பிரபுதேவாவிற்காக நடித்ததாக கூறியுள்ளார்.
அதோடு அந்த படபிடிப்பில் தனக்கும் விஜய்க்கும் ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டது.
அன்றிலிருந்து நான் விஜய் படம் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன் என பேசியுள்ளார், இது வைரல் ஆகி வருகிறது.