கொரோனா வைரஸால் உலகம் முழுக்க 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
இந்தியாவிலும் 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
மக்களும் மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
இந்நிலையில் ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான ஆமிர் கானுடைய வீட்டில் பணியாற்றும் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாம்.
இந்நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.
இதனால் ஆமீர் கான் தன்னுடை ஊழியர்களை நன்றாக கவனித்து வரும் சுகாதார துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய அம்மாவை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். அவருக்கு கொரோனா இருக்கக்கூடாது என வேண்டிக்கொள்ளுங்கள் என்று கேட்டுள்ளார்.