Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த லாக்டவுனில் தளபதி விஜய் திரைப்படங்கள் படைத்த பெரிய சாதனை, உண்மையில் இவர் தான் TRP கிங்.. !

தளபதி விஜய் தற்போது தற்போது தமிழ் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவருக்கு தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

சென்ற வருடம் இவர் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து வெளியான திரைப்படம் பிகில், இப்படம் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியது.

அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படமும் கொரோனா காரணத்தினால் வெளியிடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்ற வாரம் ஒளிபரப்பான இவரின் ஜில்லா திரைப்படம் (10138) TRP யை பெற்று, அந்த வாரம் ஒளிபரப்பான திரைப்படங்களை முந்திக்கொண்டு முதல் இடம் பிடித்தது.

மேலும் இதிலிருந்து தளபதி விஜய் திரைப்படங்கள் ஒரு சாதனையை படைத்துள்ளது. அது என்னவென்றால் இந்த லாக்டவுனில் ஒளிபரப்பான திரைப்படங்களில் தளபதி விஜய்யின் மூன்று திரைப்படங்கள் ஒரு கோடிக்கும் அதிகமான (Impressions) பெற்றுள்ளது.

ஆம் என்னென்ன திரைப்படங்கள் என்று பாருங்கள்.,

1. கில்லி - 1.34 கோடி impressions

2. வேட்டைக்காரன் - 1.22 கோடி

3. ஜில்லா - 1.01 கோடி