Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

600 படங்களுக்கு மேல் நடித்த பிரபல காமெடி நடிகர் மரணம்! குடும்பத்தினர் கவலை - இறந்தவரின் புகைப்படம் உள்ளே

உலகமே இந்த வருடம் எதிர்பாராத ஒன்றாக கொரோனாவை சந்தித்திருக்கிறது. இந்நிலையில் எப்போது சரியாகி இயல்பு நிலைக்கு திரும்புவோம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

கொரோவினால் லட்சக்கணக்கில் மரணங்கள் ஒரு பக்கம் நிகழ்ந்து வருகிறது. மறுபக்கம் வயது மூப்பு, உடல் நலக்குறைவு போன்ற காரணங்களால் இறந்தவர்களும் உண்டு,

சேதுராமன், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ராஜ்புட், விசு, இர்ஃபான் கான் என பலர் இறந்துள்ளனர்.

இந்நிலையில் 600 படங்களுக்கு மேல் நடித்த பிரபல காமெடி நடிகரும் மிமிக்ரி கலைஞருமான ராஜ கோபால் சிறுநீரக கோளாறு மற்றும் ஆஸ்துமா பிரச்சனையால் பெங்களூரில் உள்ள இல்லத்தில் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

69 வயதான அவருக்கு மனைவியும் மூன்று மகள்களும் இருக்கிறார்கள். கன்னட சினிமாவில் பல படங்களில் நடித்தவர் தமிழ் சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார்.