Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உண்மையை மூடி மறைக்க கோடிக்கணக்கில் பேரம்! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பாடகி சுசித்ரா!

அண்மையில் நாடு முழுக்க மக்கள் பலரையும் கவலையில் ஆழ்த்திய சம்பவம் சாத்தான் குளம் தந்தை மகன் இரட்டை கொலை சம்பவம்.

காவல் நிலையத்தில் இருந்தவர்கள் போலிசாரால் அடித்து சித்ரவதை செய்யப்பட்டு இறந்ததாக சொல்லப்பட்டு உண்மையை கண்டுபிடித்து கொலைக்கு காரணமான அந்த இரண்டு காவலர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கமாறு பெரும் புரட்சி நிலவியது.

இந்நிலையில் ரேவதி என்ற பெண் காவலரின் வாக்கு மூலத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அந்த இரண்டு காவலர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் சமூக வலைதளத்தில் இச்சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த காரணமாக இருந்தது பாடகி சுசித்ராவின் பதிவு தான். அமெரிக்காவில் நடந்த சம்பவத்தை ஒப்பிட்டு அவர் பதிவிட கிரிக்கெட் என மற்ற துறை சார்ந்தவர்களிடமும் தொடர் ஆதரவு பெருகியது.

இந்நிலையில் சுசித்ராவிடம் இது போன்ற சம்பவத்தில் உண்மையை மூடி மறைக்க ரூ 2 கோடி பேரம் பேசப்பட்டதாக தற்போது அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.